1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அவற்றை மறைத்து மகிழ்ச்சியை காண்பிக்கும் ஒன்றாம் எண் வாசகர்களே, இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்கள் வந்து சேரும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகஸ்தர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டியிருக்கும். குடும்பத்தார் சிலசமயம் மனதை நோகடிப்பர். பிள்ளைகளுக்கு கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் அனுகூலம் தரும். மாணவர்களுக்கு கல்விச் செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறும் நம்பிக்கை அதிகரிக்கும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.
பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் அபிஷேகத்திற்கு எலுமிச்சைச் சாறு கொடுக்கவும்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் இரண்டாம் எண் வாசகர்களே, இந்த மாதம் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். மரியாதை, அந்தஸ்து உயரும். வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். தொழில், வியாபாரம் சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் புதிய பதவி, கூடுதல் பொறுப்புகள் பெறுவர்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர், நண்பர்களிடையே மதிப்பு உயரும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். பெண்கள் திறமையாகப் பேசி சாதிப்பீர்கள். மாணவர்கள் முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6.
பரிகாரம்: பவுர்ணமியில் அம்மனை பூஜிக்க பணப் பிரச்னை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
சின்னதைப் பெரியதாகவும், பெரியதை சிறியதாகவும் மாற்றும் கலை அறிந்த மூன்றாம் எண் வாசகர்களே, இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசுங்கள். பொருட் களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் சிரத்தையுடன் படிக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியரால் அனுகூலம் கிடைக்கும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலில், தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
பிரதிபலன் எதிர்பாராது உழைக்கும் நான்காம் எண் வாசகர்களே, இந்த மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகள் விலகி, நன்மைகள் உண்டாகும். பயணம் நன்மை தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில், வியாபாரம் முன்னேறும். உத்தியோகஸ்தர்கள் திறமையால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் சூழும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. பெண்களுக்கு புத்திசாதுரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.
சிறப்பான கிழமைகள்: செவ்வாய், புதன், வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, தென்மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 9.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எதற்கும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய ஐந்தாம் எண் வாசகர்களே, இந்த மாதம் எதிர்பாராத செலவு ஏற்படும். உஷ்ண நோய் உண்டாகலாம். இருக்கும் இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் கலகலப்பு குறையும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நிதானமாக பேசுங்கள். பெண்களுக்கு முயற்சியில் சாதகமான பலன் தாமதமாகவே கிடைக்கும். மாணவர்கள் தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.
பரிகாரம்: புதன் தோறும் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆறாம் எண் வாசகர்களே, இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்றம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான சூழ்நிலை உருவாகும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். பயணம் செல்ல நேரலாம். மாணவர்கள் கவனமாக தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது.
சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று மஹாலக்ஷ்மிக்கு மல்லிகை மலரை அர்ப்பணித்து வழிபட்டு வலம் வரவும்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எடுத்த முடிவினில் உறுதியாக இருக்கும் ஏழாம் எண் வாசகர்களே, இந்த மாதம் சுபகாரியங்கள் அனுகூலம் தரும். மனஉறுதி அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினரிடையே மதிப்பு கூடும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷம் தரும். பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயலாற்றி அனுகூலம் பெறுவீர்கள். மாணவர்கள் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
சிறப்பான கிழமைகள்: புதன், வியாழன், சனி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று தேங்காய் மாலை அணிவித்து வழிபடவும்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எடுத்த காரியங்கள் எதிலும் பின்வாங்காத அஞ்சா நெஞ்சம் உடைய எட்டாம் எண் வாசகர்களே, இந்த மாதம் வீண் செலவு ஏற்படும். காரியங்களில் தாமதம் உண்டாகும். உடற்சோர்வு, மன சோர்வு வரலாம். மிகவும் வேண்டியவரைப் பிரிய நேரிடும். எதையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியைக் குறைக்கும் சம்பவம் நடக்கலாம். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் தீர ஆலோசனை செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.
சிறப்பான கிழமைகள்: வெள்ளி, சனி.
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வலம் வாருங்கள்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
எதிலும் லாப நஷ்டத்தைக் கணக்கிடும் குணமுடைய ஒன்பதாம் எண் வாசகர்களே, இந்த மாதம் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். மனதில் உற்சாகம் ஏற்படும். தீ, ஆயுதங்களை கையாளும்போது கவனம் தேவை. நண்பர்களிடமிருந்து பிரிய வேண்டியிருக்கும். தொழில், வியாபாரத்தில் இடர்ப்பாடுகள் ஏற்படலாம். கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் அலைச்சலும், கூடுதல் உழைப்பும் உண்டாகும். குடும்பத்தில் சில்லரை சண்டைகள் ஏற்படலாம். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள் மற்றும் தகப்பனாரிடம் வீண் விவாதங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். மாணவர்கள் இரு சக்கர வாகனங்களை எச்சரிக்கையாகப் பயன்படுத்துங்கள். பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அருகி லிருக்கும் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, 9 முறை வலம் வரவும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.