வில்லியனூர்: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் வடம் பிடித்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். புதுவை மாநிலம் வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேர் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் போது தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு இரவில் வீதி உலா நடைபெற்றது.
நேற்று முக்கிய திருவிழாவான தேரோட்டம் காலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். அவருடன் மாநில பொதுச் செயலாளர் கண்ணபிரான், இந்து அறநிலைய துறை ஆணையர் தில்லைவேல் மற்றும் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி பகுதியில் உள்ள காமாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. இதில் சரவணா சிவாச்சாரியார் உட்பட கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.