ஊட்டி: ஊட்டி பெர்ன்ஹில் பவானீஸ்வரர் திருக்கோவில் 106ம் ஆண்டு ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு திருத்தேர் விழா நேற்று நடந்தது. ஊட்டி அருகே பெர்ன்ஹில் பகுதியில் பவானீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா புகழ்பெற்றதாகும். இந்தாண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருத்தேர் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பவானீஸ்வரர் கோயிலில் இருந்து திருத்தேர் ஊர்வலம் துவங்கியது.
தேருக்கு முன்பு நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களான தோடர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய நடனம் ஆடி தேரை இழுத்து வந்தனர். தேர் ஊட்டி மத்திய பஸ் நிலையம், மெயின் பஜார், மாரியம்மன் கோயில், கமர்சியல் சாலை, வேணுகோபால சுவாமி கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில், லோயர் பஜார் மீண்டும் மத்திய பஸ் நிலையம் வழியாக கோயிலை அடைந்தது.
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.