செய்துங்கநல்லூர்: தென் சிதம்பரம் என்று போற்றப்படும் செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோயில் திருவாதிரை விழாவில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி நடந்தது. செய்துங்கநல்லூரில் மிகப்பழமையான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்கிரபதீஸ்வரர் கோயிலில் கடந்த 24ம் தேதி கோயிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றப்பட்டு, விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது. 8ம் நாளான கடந்த 31ம் தேதி யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நடராஜர் மற்றும் விநாயகர், முருகன், மாணிக்கவாசகர், சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மாணிக்கவாசகர் புறப்பாடு, மாணிக்கவாசகர் நடராஜ பெருமானோடு ஐக்கியம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி பச்சை சாத்தி வீதி உலா வந்தார். 9ம் நாளான 1ம் தேதி நடராஜர் மற்றும் பஞ்ச முர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 10 நாளான நேற்று திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள், ருத்ர ஹோமம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.
நடராஜர் நடன தீபாராதனை, ஆருத்ரா தரிசனம், காரைக்கால் அம்மையார் மற்றும் மாணிக்காவாசகருக்கு நடராஜ பெருமான் திருநடன காட்சியை அளித்தல் வைபவம் நடந்தது. தொடர்ந்து சிவகாமி அம்பாள் நடராஜபெருமான் திருவீதி உலா எழுந்தருளல், மீண்டும் ஆலயம் சேர்ந்தவுடன் தீபாராதனை நடந்தது. மாலை சுவாமி வெள்ளை சாத்தி திருவீதி உலா எழுந்தருளல் நடந்தது. 11ம் நாளான இன்று (3ம் தேதி) காலை 9 மணிக்கு யாகசாலை பூஜைகள், நடராஜர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்த வாரி எடுத்து வருதலும் மாலை 5 மணிக்கு கொடி பட்டம் நிறைவு பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தமாதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.