திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழாவின் தொடர்ச்சியாக நேற்று மறுவூடல் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று திருவூடல் திருவிழாவாகும். சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடலை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த விழா நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு திருவூடல் திருவிழா நேற்று முன்தினம் திருவூடல் தெருவில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஊடல் காரணமாக அம்மன் கோயிலுக்கு சென்றார்.
உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் குமரக்கோயிலுக்கு சென்றார். அதன்தொடர்ச்சியாக, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் நேற்று அதிகாலை 5 மணியளவில் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது, கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் ஆண்டுக்கு இருமுறை கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி தீபம் முடிந்து கிரிவலம் சென்றனர். அதைத்தொடர்ந்து, 2வது முறையாக திருவூடல் திருவிழாவையொட்டி நேற்று உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் சென்றனர்.
பின்னர், அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது அலங்கார ரூபத்தில் அம்மனுடன் எழுந்தருளி அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய் வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.