திருமலை: திருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலை யொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டைக்கு சென்றார். பின்னர் யானைகள் அணிவகுக்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலன்று மலையப்ப சுவாமி பார்வேட்டைக்கு செல்லும் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு மாட்டுப்பொங்கலையொட்டி நேற்று மதியம் மலையப்ப சுவாமியை கத்தி, கதை, வில், அம்பு உட்பட பல்வேறு ஆயுதங்களுடன் அலங்கரித்து பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்துக்கு அர்ச்சகர்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
பின்னர் பார்வேட்டை மண்டபத்தில் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்னமய்யா சங்கீர்த்தனை இசைக்கப்பட்டது. இதையடுத்து, அர்ச்சகர்கள் மலையப்ப சுவாமியுடன் வனப்பகுதியில் மூன்று முறை ஈட்டி எறிந்து வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, துணை செயல் அலுவலர் கோதண்டராமாராவ் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். வேட்டை முடிந்ததும் மலையப்ப சுவாமி கோயிலுக்கு வீதி உலா வந்தார். அப்போது யானைகள் அணிவகுத்து செல்ல, அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்கள், பஜனை மற்றும் கோலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.