உடுமலை: உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் ஆல்கொண்டமால் கோயில் உள்ளது. மாலகோயில் என அழைக்கப்படும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனையுடன் துவங்கியது. அன்று மாலை உழவர்திருநாள் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மாலை சுவாமி திருவீதி உலா நடந்தது. நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு கன்றுகள், ஆடுகள் தானமாக வழங்கப்பட்டது. மேலும் தங்கள் கால்நடைகளின் நலனுக்காக, கோயிலில் உள்ள நந்தி சிலை முன்பு ஆடு, பசு, காளை, குதிரை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை படைத்து காணிக்கை செலுத்தினர். இதனால், நந்தி சிலை முன்பு ஆயிரக்கணக்கில் கால்நடை பொம்மைகள் குவிந்தன. உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் இருந்து சோமவாரப்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.