அலங்காநல்லூர்: முருகப்பெருமானின் ஆறாவது படையாக விளங்கும் சோலைமலை முருகன் கோயில் அழகர்மலை உச்சியில் உள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைபூச திருவிழா. இந்த விழா நேற்று காலை 9.45 மணிக்கு தங்கக் கொடிமரத்தில் மயில் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் நாணல் புல், வண்ண மலர்கள், நீண்ட மாலைகள், மாவிலை உள்ளிட்ட பொருட்களால் கொடிமரம், அலங்கரிக்கப்படிருந்தது. தொடர்ந்து மேள தாளம் முழங்க உற்சவர் சுவாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மூலவர் சன்னதியில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) அன்னவாகனத்திலும் 24ம் தேதி காமதேனு வாகனத்திலும், 25ம் தேதி ஆட்டுகிடாய் வாகனத்திலும், 26ம் தேதி பூச்சப்பரத்திலும், 27ம் தேதி யானை வாகனத்திலும், 28ம் தேதி பல்லக்கிலும், 29ம் தேதி குதிரை வாகனத்திலும், 30ம் தேதி தங்க தேரோட்டத்திலும், சோலைமலை முருகப்பெருமான்
எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 31ம் தேதி தைப்பூசத்தையொட்டி அன்று வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி காட்சி தருவார். விழாவையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் நான்கு ஐந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தமாதமாக வரும். உத்தியோகத்தில் அதிருப்தி உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.