இலுப்பூர்:இலுப்பூரில் உள்ள அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இலுப்பூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இப் பகுதியில் உள்ள ஒரே வைணவ கோயிலான இக்கோயில் கடந்த 1980 ஆண்டு கும்பாபிஷேம் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னர் அரசு நிதி உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நிதிகள் பெறப்பட்டு கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் பிறகு இக் கோயிலின் கும்பிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 8ம் தேதி முகூர்த்தகால் ஊன்றும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நேற்று முன் தினம் யாக சாலைகள் அமைக்கப்பட்டு காலை சுதர்சன ஹோமம் நடைபெற்றது. ராமானுஜர் கூடத்தில் இருந்து தீர்த்தகுடங்கள் புறப்பட்டு கிருஷ்ணன் மடத்தில் சிறப்பு பூஜை செய்த பின்னர் தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. அதை தொடர்ந்து பகவதி அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கலச பூஜை, வாஸ்து ஹோமம், கும்ப பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நான்கு கால பூஜைகளாக நடத்தப்பட்டு நேற்று காலை 10 மணிக்கு மன்னார்குடி செங்கலாங்கா ஜீயர் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடைபெற்றது.
விழாவில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ், முன்னாள் கல்வி அமைச்சர் பொன்னுசாமி, எஸ்பி செல்வராஜ்,முன்னாள் பேரூராட்சி தலைவர் குருமன்னார்,மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளர் உதயகுமார் உட்பட இலுப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி உபயதார்கள சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.