பழநி: பழநி அருகே கணக்கன்பட்டி சற்குரு பழநி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழநி அருகே கணக்கன்பட்டியில் சற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அனுக்கை, கணபதி ஹோமம், த்ரவியங்களை சற்குரு சுவாமிகளுக்கு அர்ப்பணம் செய்தல், தன பூஜை, நவக்கிரஹ ஹோமம், ப்ரவேச பலி, ரஷோக்ன ஹோமம், சாந்தி ஹோமம், ஆசார்ய தசவித ஸ்நாகம், அக்னி சங்கிரஹணம், வாஸ்து சாந்தி, பாலிகை பூஜை, காப்புக்கட்டுதல், கும்பாலங்காரம், யாத்ரா தானம், யாகசாலை பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, லட்சமி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட கலசத்தின் மூலம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் கருணாலய துரை, ராமநாதன், சுசில்குமார், வீரகாந்தி, நாமக்கல் சற்குரு அறக்கட்டளையினர், மதுரை ஞானசபையினர், கரூர் பக்தர் பேரவையினர், சேலம் பாட்டி சித்தர் பக்தர் பேரவையினர் என பலர் கலந்து கொண்டனர்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். டென்ஷன் கோபம் யாவும் நீங்கும். கடனாக கொடுத்த பணத்தை திருப்பி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து முன்னேற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.