மகரம்
17.07.2019 முதல் 17.08.2019 வரைஎங்கும் எப்போதும் உண்மையையும், யதார்த்தத்தையும் விரும்பும் நீங்கள் பரந்த மனதுக்கு சொந்தக்காரர்கள். யாரையும் பகைத்துக் கொள்வதை விரும்பாத நீங்கள் அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களை எப்படிக் கேட்டாலும் சொல்ல மாட்டீர்கள். குரு லாப வீட்டில் நிற்பதால் தன்னம்பிக்கை பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கல்வியாளர்கள், அறிஞர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆனால் 23ம் தேதி வரை சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் அலைச்சல், செலவினங்கள், கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்களும் வரக்கூடும். 24ம் தேதி முதல் சுக்கிரன் சாதகமாவதால் மனைவியின் ஆரோக்யம் சீராகும். வீடு கட்டுவதற்கு அனுமதியும் கிடைக்கும். பழுதான மின்சார சாதனங்கள், செல்போனை மாற்றி புதிதாக வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 03ம் தேதி முதல் புதன் சாதகமாக அமைவதால் பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலை கிடைக்கும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். அவர்வழி உறவினர்களிடம் பகைமை வெடிக்கும். பிராத்தனைகளை நிறைவேற்ற குடும்பத்துடன் ஆன்மீகப்பயணம் சென்று வருவீர்கள். 7ல் சூரியன் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் கோபப்படாதீர்கள். ரத்த அழுத்தம் அதிகமாகும்.
மனைவிவழியில் அலைச்சல், செலவு இருக்கும். அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப்பாருங்கள். கன்னிப் பெண்களே! திறமையான வகையில் செயல்படுவீர்கள். மாணவர்களே! விளையாட்டு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு, பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வேலையாட்கள், பங்குதாரர்கள் உதவுவார்கள். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மேலதிகாரி அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். புது வாய்ப்புகளும் தேடி வரும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினர்களே! சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். விவசாயிகளே! மகசூல் இரட்டிப்பாகும். மீதிப்பணம் தந்து பக்கத்து நிலத்தை கிரயம் செய்வீர்கள். வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதை உணரும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 20, 21, 22, 23, 24, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 7, 9, 10, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 2ம் தேதி நண்பகல் 12.02 மணி முதல் 3, 4ம் தேதி பிற்பகல் 2.22மணி வரை.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை சென்று வணங்குங்கள்.