மீனம்
17.07.2019 முதல் 17.08.2019 வரைதர்மத்திற்கு தலை வணங்குபவர்களே! தவறு செய்பவர்களை தயங்காமல் தண்டிப்பவர்களே! ரசிப்புத் தன்மை அதிகம் கொண்ட நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் சாதிக்க வேண்டுமென நினைப்பீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் உங்களுடைய அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்தி சிலர் உங்களை பகடைக் காயாக உருட்டினார்களே! இனி உங்களுடைய பலவீனங்களை நீங்களே சரி செய்து கொள்வீர்கள். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். சமையலறையை நவீனப்
படுத்துவீர்கள். ஆகஸ்ட் 09ம் தேதி வரை 5ல் செவ்வாய் நிற்பதால் பிள்ளைகளால் மன உளைச்சல், டென்ஷன், வீண் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும். சூரியன் 5ல் நிற்பதால் பிள்ளைகளின் வருங்காலம் குறித்து கவலைப்படுவீர்கள். சொந்த ஊரில் பொது விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். சொத்துப் பிரச்னைகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுக வேண்டாம். உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை குருபகவான் பார்த்துக் கொண்டிருப்பதால் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பழைய சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது. கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வார்கள். மாணவர்களே! கொஞ்சம் செலவு செய்து போராடி நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்வீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். வேலையாட்கள் மதிப்பார்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்கள் கடை தேடி வருவார்கள். பங்குதாரர்களை விட்டுப் பிடியுங்கள். கடையை விரிவுப்படுத்துவது குறித்து ஆலோசிப்பீர்கள். புரோக்கரேஜ், ஹோட்டல், எலட்ரானிக்ஸ் சாதனங்களால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விவசாயிகளே! சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். அதிரடி முடிவுகளால் முன்னேறும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 18, 20, 25, 26, 28 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 11, 12, 13, 14, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 6ம் தேதி மாலை 5.07மணி முதல் 7,8ம் தேதி இரவு 9.07மணி வரை.
பரிகாரம்: புதன் கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்குங்கள்.