மிதுனம்
15.1.20 முதல் 12.2.20 வரைசாதக பாதகங்கள் கலந்திருக்கும். போராட்டமான சூழலை எதிர்கொள்ள நேரிடும். நினைத்த காரியங்கள் இழுபறி தரும். எது எப்படி இருந்தாலும் எதிலும் நீங்களே நேரடியாக இறங்கி சுறுசுறுப்புடன் காரியமாற்றினால் உழைப்பிற்கான பலனை உடனடியாகக் காண்பீர்கள். தனலாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். குழந்தைகள் குறித்த உங்கள் எதிர்கால எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அடுத்தவர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள் வெற்றி பெறும். அதே நேரத்தில் அடுத்தவர்களை நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவது கூடாது. உடன்பிறந்தோரால் இழப்புகளை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி எரிச்சலூட்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற நண்பர்களோடு இணைந்து படிப்பது நல்லது. அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகும். நரம்புத்தளர்ச்சி பிரச்னைகள் வரலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் அவசியம். தொழில்முறையில் உடன் பணிபுரிவோரை அனுசரித்து செல்வது அவசியம். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினை ஆக்கிரமிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு நன்மை காண வேண்டிய மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 24, 25
பரிகாரம்: செவ்வாய்தோறும் அம்பிகை வழிபாடு சுறுசுறுப்பைத் தரும்.