கடகம்
17.07.2019 முதல் 17.08.2019 வரைதனக்கென தனிப்பாதை அமைத்துக் கொள்பவர்களே! எல்லா செயல்களுக்கும் காரண காரியம் கற்பித்து பேசுபவர்களே! பகுத்தறிவால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை ஆட்சி செய்பவர்களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் மன இறுக்கங்கள் குறையும். தைரியம் பிறக்கும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிய முனைவீர்கள். வி.ஐ.பிகளும் அறிமுகமாவார்கள். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில் சுக்கிரனும் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். எதிலும் வெற்றி உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உங்கள் ராசிக்குள் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் முன்கோபத்தால் குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வந்து போகும். குருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்து பங்கு கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும் அமர்ந்திருப்பதால் முன்கோபத்தால் கொஞ்சம் படபடத்துப் பேசுவீர்கள்.
அடுத்தடுத்து வேலைகள் இருந்துக் கொண்டே இருக்கும். காய்ச்சல், சளித் தொந்தரவு வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது. கன்னிப்பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். மாணவர்களே! கூடா பழக்கம் விலகும். நினைவாற்றல் பெருகும். விளையாட்டில் பதக்கம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனங்கோணாமல் நடத்து கொள்வார்கள். அழகு சாதனப் பொருட்கள், உணவு, கெமிக்கல் வகைகளால் லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். விவசாயிகளே! பழைய மோட்டார் பம்பு செட்டை மாற்றுவீர்கள். நீர்பாசனப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 18, 26, 27, 28, 29 மற்றும் ஆகஸ்ட் 3, 4, 5, 7, 11, 12, 14.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 19ம் தேதி பிற்பகல் 3.10 மணி முதல் 20, 21ம் தேதி வரை மற்றும் ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 10.21 மணி முதல் 16, 17ம் தேதி வரை.
பரிகாரம்: பிரதோஷ நாளில் ஸ்ரீசரபேஸ்வரரை சென்று வணங்குங்கள்.