சிம்மம்
17.07.2019 முதல் 17.08.2019 வரைமூளையை மூலதனமாக்கி முன்னேறுபவர்களே! தோல்விகளைக் கண்டு ஒருபோதும் துவளாதவர்களே! முதல் முயற்சியிலேயே எதையும் முடிக்க விரும்புபவர்களே! இந்த மாதம் முழுக்க சுக்கிரன் வலுவாக நிற்பதால் பழைய சொத்து விற்பதன் மூலமாகவோ, பாகப்பிரிவினை மூலமாகவோ பணம் வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர் பழைய நகையை மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். புதனும் சாதகமாக இருப்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். செல்வாக்குக் கூடும். வீடு கட்டுவதற்கு அனுமதிக் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆகஸ்ட் 9ம் தேதி வரை செவ்வாயும் மறைந்திருப்பதால் வீண் செலவு, அவப்பெயர், ஏமாற்றம், வீண்பழி வந்து போகும். சொத்துப் பிரச்னைகளை கொஞ்சம் கவனமாக கையாளப்பாருங்கள். அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் சூரியன் 12வது வீட்டில் மறைந்து நிற்பதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். டென்ஷனாவீர்கள். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். குருபகவான் 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் ஓரளவு பணவரவு அதிகரிக்கும்.
தடைகள் நீங்கும். புது முயற்சிகளும் பலிதமாகும். அரசியல்வாதிகளே! தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். தாயாரை தவறாகப்
புரிந்துக் கொள்ளாதீர்கள். மாணவர்களே! போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பங்குதாரர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். மரவகைகள், பெட்ரோல் பங்க், ஹோட்டல் வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மற்றொரு பக்கம் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களால் சிறுசிறு ஏமாற்றம், டென்ஷன் வந்துச் செல்லும். எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதமாகும். கலைத்துறையினர்களே! வசதி, வாய்ப்புகள் உயரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். விவசாயிகளே! நிலப் பிரச்னைகளை பெரிது படுத்தாமல் சுமுகமாக பேசித் தீர்ப்பது நல்லது. விளைச்சல் பெருகும். நாவடக்கமும், எச்சரிக்கை உணர்வும் தேவைப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 17, 18, 19, 20, 21, 28, 29, 30 மற்றும் ஆகஸ்ட் 5, 6, 7, 8, 14, 15.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 22, 23, 24ம் தேதி பிற்பகல் 1.45 மணி வரை.
பரிகாரம்: அஷ்டமி திதி நடைபெறும் நாளில் ஸ்ரீகால பைரவரை சென்று வணங்குங்கள்.