விருச்சிகம்
17.07.2019 முதல் 17.08.2019 வரைவிழுவதெல்லாம் எழுவதற்கே என நினைப்பவர்களே! இதயத்திலிருந்து பேசுபவர்களே! எதிலும் நடுநிலைத் தவறாதவர்களே! மற்றவர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி திருத்துபவர்களே! உங்களுக்கு சாதகமாக புதனும், சுக்கிரனும் செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷினையெல்லாம் மாற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். 9ல் சூரியன் நிற்பதால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். சேமிப்புகளும் சொஞ்சம் கரையும். குருபகவான் ராசிக்குள்ளேயே நிற்பதால் ஆரோக்யம் பாதிக்கும். தலை வலி, அடிவயிற்றில் வலி, தூக்கமின்மை, செரிமானக் கோளாறு போன்றவை வந்து நீங்கும். செவ்வாய் ஓரளவு சாதகமாக இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும்.
கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்று கலங்குவீர்கள். அரசியல்வாதிகளே! மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். பள்ளி, கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். வேலையாட்கள் கடமை உணர்வுடன் செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுக் கிளைகள் தொடங்குவார்கள். விலகிச் சென்ற பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். பால், குளிர்பானங்கள், பேக்கரி வகைகளால் ஆதாயமடைவீர்கள். சூரியன் 9ல் நிற்பதால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். இடம் மாற்றம் வரும். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களை விமர்சித்துப்பேச வேண்டாம்.கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவசாயிகளே! உங்களின் கடுமையான உழைப்பிற்கு ஏற்ப மகசூல் கூடும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும் மாதமிது.
ராசியான தேதிகள்: ஜூலை 18, 19, 20, 21, 25, 26, 28 மற்றும் ஆகஸ்ட் 2, 3, 4, 5, 12, 14, 17.
சந்திராஷ்டம தினங்கள்: ஜூலை 29, 30, 31ம் தேதி காலை 9.08 மணி வரை.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஸ்ரீசீரடிசாய்பாபாவை சென்று வணங்குங்கள்.