மேஷம்
15.1.20 முதல் 12.2.20 வரைதை பிறந்தால் வழிபிறக்கும் என்பது உண்மையாகி நற்பலன்களைக் காண உள்ளீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் கவுரவம் உயரும். பொதுப் பிரச்னைகளில் முன்நின்று செயல்படுவீர்கள். இக்கட்டான சூழலில் விவேகமான செயல்திட்டங்கள் வெற்றிபெற்று தரும். நேரத்திற்குத் தக்கவாறு பேசி நற்பலன் காண்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பும், சலசலப்பும் மாறி மாறி இருக்கும். நிலுவையில் இருந்த பாக்கிகள் விரைவில் வசூலாகும். எதிர்பார்க்கும் வரவு வரும். புதிய பெண் நண்பர்களின் மூலம் செயல்திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பொழுதுபோக்குக்கும் பயன்தரும். உடன்பிறந்த சகோதரருக்கு உதவி செய்வீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் மேன்மையடையும். உறவினர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் வரும். அவர்களோடு கருத்து வேறுபாடும் தோன்றும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையும், நிதானமும் தேவை. கூட்டுத்தொழில் செய்வோர் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்யோகஸ்தர்கள் அலுவலகக் கோப்புகளை பொறுமையுடன் கையாள்வது நல்லது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 20, 21
பரிகாரம்: வினைகள் தீர விநாயகரை வணங்கலாம். தைப்பூச நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் அன்னதானம் செய்யவும்.