மகரம்
15.1.20 முதல் 12.2.20 வரைவேகமான செயல்பாடுகளால் படிப்படியாக சிரமங்கள் குறையும். மனதில் இருக்கும் கஷ்டத்தினை வெளிப்படுத்திக் கொள்ளாது எதையும் தாங்கும் இதயத்தோடு வலம் வருவீர்கள். இழுபறியான சூழலைச் சந்திக்க நேரும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாகி வருத்தம் தோன்றக்கூடும். பேச்சால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம். உங்களது ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு உபயோகமாக அமையும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தினை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய் அமையும். அண்டை அயலாருடன் பழகும்போது எச்சரிக்கை தேவை. குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் கூடுதல் செலவுகளைச் சந்திக்க நேரிடும். முடிந்தவரை அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. ஒரு சில நேரத்தில் ஞாபகமறதியினால் அவதிப்பட நேரிடலாம். இரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வழக்கு விவகாரங்களில் அடக்கி வாசிப்பது நல்லது. தம்பதியருக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றும்கலைத்துறையினர் குறைந்த லாபத்திற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அதிக அலைச்சலை சந்திக்கும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 10, 11
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி தை அமாவாசை நாளில் ஆதரவற்ற முதியோர்க்கு அன்னதானம் செய்யுங்கள்.