கும்பம்
15.1.20 முதல் 12.2.20 வரைஎதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் அமையும். அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். நெடுநாளைய விருப்பங்கள் நிறைவேறும் நேரம் இது. நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். பல்வேறு வழிகளிலிருந்தும் பொருள் வரவினைக் காணத் துவங்குவீர்கள். பேசும் வார்த்தைகளில் தேர்ந்தெடுத்த கருத்துக்களை பிரயோகித்து கவுரவத்தினை உயர்த்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோருக்கு உதவி செய்யும் சூழல் உருவாகக் கூடும். பிரயாணத்தின்போது புதிய நட்பு உண்டாகும். தகவல் தொடர்பு சாதனங்கள் மிகுந்த பயன்தரும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வாகனங்களினால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பான சூழலை உருவாக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் சேரும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்களில் முன்னோர்களின் சாயலைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு நற்தகவல் வந்து சேரும். தொழில்முறையில் போட்டியான சூழலை சந்திக்க நேர்ந்தாலும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் தனலாபம் காண்பார்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 15, 16, பிப்ரவரி 12
பரிகாரம்: திங்கள்தோறும் 11 முறை சிவாலய பிரதட்சிணம் செய்து வாருங்கள்.