கடகம்
15.1.20 முதல் 12.2.20 வரைஎதிர்பார்ப்புகள் நிறைவேறும். இழுபறியில் இருந்த குடும்பப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுகமான சூழ்நிலை இருந்தாலும் ஓய்வின்றி செயல்பட வேண்டியிருக்கும். எதிலும் எதிர்ப்புகளை மீறி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். அதிகாரமான பேச்சால் அவப்பெயர் வந்தாலும் அதுவே உங்கள் பலமாகவும் இருக்கும். உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும். சுயகவுரவத்திற்காக அகலக்கால் வைக்கலாகாது. புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக அமையும். வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். தொலைதூரப் பிரயாண வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் உங்கள் கவுரவம் உயரும். நீண்ட நாட்களாக திருமண கனவில் இருந்தவர்களுக்கு கனவு கைகூடி வரும் நேரம் இது. சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு உடல்நிலையில் சிறப்பு கவனம் அவசியம். முக்கியமான பிரச்னையில் நண்பர்களின் ஆலோசனை கைகொடுக்கும். ஆன்மிகச் செலவுகள் அதிகரிக்கும். தொழில்முறையில் கூடுதல் உழைப்பினை வெளிப்படுத்த நேரும். ஆயினும் அதற்குரிய தனலாபம் உடனடியாகக் கிடைக்கும். கலைஞர்கள் மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். சாதகமான மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 26, 27, 28
பரிகாரம்: புதன்தோறும் சக்கரத்தாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.