கன்னி
15.1.20 முதல் 12.2.20 வரைசுயகவுரவத்திற்காக அடுத்தவர்களின் பணிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வீர்கள். உங்கள் செயல்களை பொறுத்தவரை அடுத்தவர்களின் உதவியை அதிகம் எதிர்பாராது சுயபலத்தை மட்டும் நம்பி செயலில் இறங்குவது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்து கையிருப்பில் ஏதும் மிஞ்சாது போகும். பேச்சால் நற்பெயர் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளின் மூலம் நன்மை ஏற்படும். தேவையற்ற பிரயாணங்களைத் தவிர்க்கவும். தகப்பனார் வழி உறவினர் ஒருவருடன் மனஸ்தாபம் தோன்றும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. மாணவர்களின் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளின் செயல்களில் மந்தத்தன்மை இருக்கும். குடும்பத்தினருடன் கேளிக்கை, கொண்டாட்டங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். முக்கியமான பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனையைக் கருத்தில் கொள்வது நல்லது. கவுரவச் செலவுகள் அதிகரிக்கும் நேரம் என்பதால் பண விவகாரங்களில் சுயகட்டுப்பாடு தேவை. தொழில்முறையில் கூடுதல் அலைச்சல் இருக்கும். அதற்கேற்ற லாபமும் கிடைக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த தன லாபம் கிடைக்கும். அலைச்சலின் பேரில் வெற்றி காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜனவரி 31, பிப்ரவரி 1, 2
பரிகாரம்: சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை தினந்தோறும் ஜபித்து வரவும்.