தனுசு
15.1.20 முதல் 12.2.20 வரைபலன்களில் சாதக பாதகங்கள் கலந்திருக்கும். எந்த ஒரு காரியத்தையும் எளிதாகச் செய்துமுடித்து வெற்றி பெறுவீர்கள். சிறப்பான வரவு உண்டு. கடன்பிரச்னைகள் முற்றிலும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தக்க நேரத்தில் பயன் தரும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்குத் துணை நிற்கும். பெரிய மனிதர்களுடனான சந்திப்பு உங்கள் கவுரவத்தை உயர்த்துவதோடு எதிர்காலத் திட்டங்களுக்கும் பயன் தரும். வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்குக் காலநேரம் சாதகமாக அமையும். வண்டி, வாகனங்கள், பிரயாணங்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்களின் வருகை குடும்பத்தின் கலகலப்பை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் மேன்மை காண்பார்கள். விளையாட்டுத்துறை சார்ந்த மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஈடுபாடு கூடும். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அன்யோன்யம் அதிகரிக்கும். தான தரும காரியங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம். தொழில்முறையில் தனித்துவத்தை வெளிப்படுத்துவீர்கள். சாதகமான பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: பிப்ரவரி 7, 8, 9
பரிகாரம்: தினந்தோறும் 16 முறை ஸ்ரீராமஜெயம் எழுதி வரவும்.