1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எல்லோரையும் வசீகரிக்கும் இயல்பும், இனிமையான பேச்சும் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியம் பெறும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும்; முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9, 7.
பரிகாரம்: ஞாயிறுதோறும் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும்.
2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
பக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி பெறும் இரண்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்னை தலை தூக்கலாம். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: மேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
வைராக்கியமும், பிடிவாத குணமும் கொண்ட மூன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். தொழில், வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். பெண்கள் எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்தநிலை மாறும்.
சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: தென்கிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 9, 7.
பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்கவும்.
4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
பழகுவதற்கு இனிமையான குணம் கொண்ட நான்காம் எண் அன்பர்களே, இந்த மாதம் தடைகள் நீங்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்படும்; பெற்றோர், ஆசிரியர் ஆலோசனையால் அந்தக் கவலை நீங்கும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன்.
அனுகூலமான திசைகள்: மேற்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6, 8.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும்.
5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
அனைத்திலும் உங்களது விருப்பப்படியே செயல்படும் ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த மாதம் செலவு அதிகரிக்கும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சல், காரிய தாமதம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.
சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6, 8.
பரிகாரம்: பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குறைகள் நீங்கும்.
6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
துடிப்புடன் செயலாற்றும் ஆறாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதையும் பலமுறை யோசித்து செய்வது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். வேடிக்கை வினோதங்களைக் கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்குத் தொலைதூர தகவல்கள் மனமகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்குக் கல்வி சம்பந்தமான தொடர்புகள் சாதகமாக முடியும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 5, 8.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மைகள் வந்து சேரும். துன்பங்கள் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
நீதி, நேர்மை, நியாயத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த மாதம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப் படும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் நினைத்ததை விட கூடுதலாகப் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
சமயோசித புத்தியுடன் செயல்படும் எட்டாம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். இம்மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை உண்டாகும். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
அனுகூலமான திசைகள்: வடக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 5, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயரை சனிக்கிழமை வெண்ணெய் சாத்தி வழிபட மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எதிலும் நிதானமாக ஈடுபட்டு வெற்றியுடன் முடிக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். தொழில், வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன்-மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்துகொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.
சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி, வியாழன்.
அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.
பரிகாரம்: முருகக் கடவுளை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.