உத்திரம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
வரவையும், செலவையும் சரியாக பயன்படுத்தும் உத்திர நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களைச் சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும். கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை போட நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சைக் குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். குடும்பத்தில் வீண் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம்.
அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது ஆறுதலைத் தரும். பெண்கள் எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.
பரிகாரம்:
குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தைப் போக்கும். செல்வம், செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சூரியன், செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட மாதங்கள்:
சித்திரை, ஆவணி, மார்கழி, தை.