அனுஷம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் இருபதாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
வெளியூர் பயணத்தில் ஆர்வமுடன் இருக்கும் அனுஷ நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பல நல்ல பலன்களை பெற முடியும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்னை தீரும். செல்வ நிலை உயரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்றியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.
பரிகாரம்:
அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் அபிஷேகம் செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம்
நன்றாக நடக்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
புதன், சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஐப்பசி, தை, மாசி.