மூலம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினெட்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
பிள்ளைகள் மேல் அதிக நேசம் வைத்திருக்கும் மூல நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது.
நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியைத் தரும். கலைத்துறையினர் நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை. அரசியல்துறையினர் பல தடைகளைத் தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.
பரிகாரம்:
மஹாலக்ஷ்மியை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சூரியன், செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட மாதங்கள்:
சித்திரை, ஆவணி, மார்கழி.