திருவோணம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினைந்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
வழக்கத்தைவிட அதிகமாக உழைக்கத் தயாராகும் திருவோண நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனமகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுவது நல்லது. பெண்கள் விடா முயற்சியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள்.
பணவரவு திருப்திதரும். கலைத்துறையினர் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். அரசியல்துறையினர் வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரவு கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைப் படி செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்:
வினாயகருக்கு அறுகம்புல் மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சந்திரன், சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வெள்ளி.
அதிர்ஷ்ட மாதங்கள்:
வைகாசி, ஆடி, தை.