பூரட்டாதி
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பன்னிரெண்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
பிள்ளைகள் மீது அதிக கவனம் கொண்டிருக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் எதிர்பாராத செலவு ஏற்படும். முயற்சிகளில் தடையை ஏற்படாதிருக்க திட்டமிடல் அவசியமாகிறது. இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். எதிலும் திருப்தி இல்லாத நிலை காணப்படும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தைத் தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவச் செலவு உண்டாகலாம். வயிற்று சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரியானுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாகப் பேசுவது நல்லது. பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியைப் பற்றிய கவலை உண்டாகும். தடையைத் தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமைதோறும் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சந்திரன், செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட மாதங்கள்:
சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.