உத்திரட்டாதி
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் பதினொன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
செயல்களில் வேகம் கொண்டுள்ள உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்னைகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளைச் செய்யவேண்டி இருக்கும்.
வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினர் கவனமாகப் பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீர்கள்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிர பகவானுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
புதன், சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஐப்பசி, தை, மாசி.