கார்த்திகை
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் ஏழாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
அடுத்தவர் கஷ்டங்களை தாமாகப் புரிந்து கொள்ளும் கார்த்திகை நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் பணவரவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்கும் முன் யோசிப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து சம்பந்தமான தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியைத் தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபத்தைத் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதும் நன்மை தரும். பெண்கள் எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். அரசியல் துறையினர் எடுக்கக் கூடிய ஒப்பந்தங்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவார்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சூரியன், செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட மாதங்கள்:
சித்திரை, ஆவணி, மார்கழி, தை.