மிருகசீரிடம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் ஐந்தாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
உறவுக்கு கட்டுப்படும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலைத் தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளைக் கவனிப்பது நல்லது. மேலதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும்.
உடல் ஆரோக்யம் அடையும். சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும். மாணவர்கள் சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதூரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்னை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.அரசியல்துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல்கள் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
பரிகாரம்:
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சூரியன், சந்திரன், செவ்வாய்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
அதிர்ஷ்ட மாதங்கள்:
சித்திரை, ஆடி, கார்த்திகை, தை.