புனர்பூசம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் மூன்றாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
வாக்கு வன்மை பெற்றிருக்கும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கைக் கண்டு பொறாமை உண்டாகலாம். கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது வீண் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்.
வாழ்க்கைத் துணை ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்கள் சாதூர்யமாகப் பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரவு கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்விக்குத் தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கைக் கைவிடுவது நல்லது. அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரவு கூடும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சந்திரன், செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட மாதங்கள்:
சித்திரை, ஆடி, கார்த்திகை, பங்குனி.