பூசம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரத்தின் இரண்டாம் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
எதிர்பாராத செலவால் திக்கு முக்காடும் பூச நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் வீண்குழப்பம் ஏற்படும். எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரவு இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாகப்பேசி அனுசரித்துச் செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்கள் எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை. மாணவர்கள் படிக்காமல் விட்ட பாடங்களைப் படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற பாடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும். அரசியல் துறையினர் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும். வேலையில் கவனமுடன் இருப்பது நல்லது.
பரிகாரம்:
மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
புதன், சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஐப்பசி, தை, மாசி.