ஆயில்யம்
14.04.2019 முதல் 13.04.2020 வரை
கிரக நிலை: உங்கள் நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தில் இந்த விகாரி வருடம் பிறக்கிறது.
பலன்:
தன்னலம் கருதாமல் பிறருக்காக பாடுபடும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே, இந்த வருடம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களைத் தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமுகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காகப் பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. பெண்கள் காரியத் தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். மாணவர்கள் அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சிறப்பான வருடமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். சமூக சேவையில் உள்ளோர்க்கு சமூக அந்தஸ்து உயரும். அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.
பரிகாரம்:
குருபகவானை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
அதிர்ஷ்ட ஹோரைகள்:
சந்திரன், புதன், சுக்கிரன்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், புதன், வெள்ளி.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஆனி, புரட்டாசி, கார்த்திகை, மாசி.