நீங்கள் பயப்படத் தேவையில்லை. மங்கு சனி எந்த கெடுதலையும் செய்ய மாட்டான். இருந்தாலும் சனி, செவ்வாய் சேர்ந்திருக்கும்போது உத்திர நட்சத்திரமாக பிறந்துள்ளபடியால் புரோகிதரைக் கொண்டு தூர்வா ஹோமம் செய்யுங்கள். வடமொழி கற்ற புரோகித அந்தணரைக் கொண்டு, ‘நாளவேஷ்டன சாந்தி’யை நல்ல நாளில் நடத்தி வெள்ளிக் கொடியையும் வெள்ளி நாகரையும் தானமாகக் கொடுங்கள். தஞ்சை - மயிலாடுதுறை வழியில் 10 கி.மீ. தொலைவிலுள்ள மணல்மேடு எனும் ஊருக்கு அருகேயுள்ள இலுப்பைப்பட்டு தலத்திலுள்ள திருநீலகண்டேஸ்வரர் கோயிலுக்கு குழந்தையை அழைத்துக் கொண்டுபோய் அபிஷேக விபூதி குங்குமத்தை இடுங்கள். குழந்தைக்கு ஆறாவது மாத சோறூட்டலை குலதெய்வச் சந்நதியில் செய்யுங்கள். குழந்தையின் பிறந்த நாளன்று அன்னதானத்தையும் மேற்கொள்ளுங்கள். எந்தப் பிரச்னையும் ஏற்படாது. சந்தோஷமாக வாழ்வீர்கள்.
வாசகர்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் வேத மார்க போதக, கதா ஸரஸபாஷி, சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
வாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.