சூரியன் பலமிழந்திருப்பதால் நரம்புகள் செயல் இழந்து போகும். இதனால் புத்துணர்ச்சி குறைந்து, கோபம், தூக்கம், சோம்பல், வெறுப்பு அனைத்தும் உங்களை தொடரும். அருகேயுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு தொடர்ந்து சென்று வாருங்கள். கேது கிரக பரிகாரமாக தர்ப்பைப் புல், நெய், கொள்ளு சாதம் இவற்றால் ஹோமம் செய்யுங்கள். மனத்தெளிவு பெற்று நன்கு தேர்வெழுதி வெற்றி பெறுவீர்கள். விருத்தாசலத்தில் அருளும் அருள்மிகு பழமலைநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள். தேவி தன் பக்தர்களுக்கு அரூபமாக பஞ்சாட்சரம் உபதேசிக்கும் தலமும் இதுவேயாகும். நீங்கள் அத்தலத்திலேயே நீராடி சிறப்பு வழிபாடு செய்து கீழேயுள்ள பாடலை 19 முறை பாடுங்கள்.
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.