சந்திரன், குரு, மாந்தி, ராகு, கேது என ஐந்து கிரகங்கள் தற்சமயம் கோசாரப்படி பலமிழந்துள்ளனர். சூரியனும் புதனும் பலமாக இருந்த சமயம் பிறந்துள்ளதால் 2014 டிசம்பருக்குள் தானாகவே பள்ளிக்குச் செல்வான். K.AKSHAY என்று மட்டும் கையொப்பம் போடட்டும். குமார் வேண்டாம். இவனை ஒருமுறை ராகு க்ஷேத்ரமான காளஹஸ்திக்கு அழைத்துச் சென்று 11 முறை கோயிலை வலம் வந்து 18 நமஸ்காரங்கள் செய்யச் சொல்லுங்கள். ‘‘தேஜஸாமபி தேஜஸ்வீத்வாத சாத்மன் நமோஸ்துதே‘‘ என்கிற வடமொழி வரியை அவனோ அல்லது நீங்களோ 61 முறை சொல்லுங்கள். பித்தளைப் பாத்திரத்தில் முழு பாசிப்பயறு வைத்து அர்ச்சகர்களுக்கு தானமாகக் கொடுங்கள். இது புதனுக்கும் சேர்த்து பரிகாரமாகும். பின்னர் நன்கு படிக்கத் தொடங்கி விடுவான்.
வாசகர்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் வேத மார்க போதக, கதா ஸரஸபாஷி, சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
வாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.