உங்கள் இருவரின் ஜாதகங்களை கார்க்கேயர் நாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் ஜாதகத்தில் சப்தமாதிபதியான (மாங்கல்ய ஸ்தானாதிபதி) புதன் தனக்கு 12வது வீடான 6ம் வீட்டில், ஆறாம் வீட்டு அதிபதியான சூரியனுடன் சேர்ந்து காணப்படுவதாலும், களத்திரகாரகன் களஸ்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், அவரே எட்டுக்குரியவராகி 7ல் நிற்பதாலும், அஷ்டவர்க்கப் பரல்களை ஆராய்ந்துப் பார்க்கும்போது சப்த ஸ்தானம் குறைவான பரல்களைப் பெற்றிருப்பதாலும் இந்தப் பிரிவு ஏற்பட்டுள்ளது. உங்கள் கணவரின் ஜாதகத்தில் குடும்பாதிபதி சூரியன் ராகுவுடன் சேர்ந்து தனக்குப் பன்னிரண்டில் மறைந்திருப்பதாலும், சப்தமத்தில் கேது அமர்ந்து சப்தமாதிபதியான சனி பகை வீட்டில், பகை நட்சத்திரத்தில் அமர்ந்திருப்பதாலும், தற்சமயம் குடும்பாதிபதியுடன் நின்ற ராகுவின் தசை 12.11.2010 முதல் தொடங்கியிருப்பதாலும் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர் சண்டை, சச்சரவில் ஈடுபடுவார். அவருக்கு ராகு தசை நடைபெறுவதால் முன்கோபமும், வீண் சந்தேகங்களும், ஈகோ பிரச்னைகளும் வந்து நீங்கும். தற்சமய கோச்சார கிரகங்களின்படி, 5.9.2014 முதல் உங்கள் ஜாதகத்திற்கு குடும்பாதிபதி, சப்தமாதிபதி, லக்னாதிபதி ஆகியோரின் பலம் கூட இருப்பதால் கசப்புணர்வுகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். இல்லறத்தில் இணைவீர்கள். சந்தான பாக்யம் உண்டு. பரிகாரமாக திருக்கடையூருக்கு அருகிலுள்ள திருவிடைக்கழி எனும் ஊரில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளன்று நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். சூழ்ச்சிகளை தாண்டி இணைவீர்கள்.
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.