ஜாதக அலங்காரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு உங்கள் அண்ணனின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். அவர் ஜாதகத்தில் உத்யோகஸ்தானமான 10ம் இடத்திற்குரிய கிரகம் 12ம் வீடான பகை வீட்டில் மறைந்திருப்பதாலும், யோகாதிபதியான செவ்வாய் நீசமாகி, பலவீனமாகி மறைந்திருப்பதாலும் உத்யோகத்தில் அடிக்கடி பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. தற்சமயம் அவருக்கு சனி மகாதசை. அது 1.7.2018 வரை நடைபெறும். பஞ்சமத்தில் சனி அமர்ந்து பகைக் கோளின் பார்வைபெற்று சனி மகாதசை நடைபெறுவதாலும் அவருக்குச் சங்கடங்கள் தொடர்கின்றன.
தற்சமயம் 13.2.2013 முதல் சனி மகாதசையில் ராகுபுக்தி நடைபெறுவதால் இந்தக் காலகட்டத்திலிருந்து அலுவலகத்தில் அவமானங்களும், மரியாதைக் குறைவான சம்பவங்களும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. பலவற்றையும் நினைத்து தாழ்வுமனப்பான்மைக்குள்ளாகி ஒதுங்கியுள்ளார். கோச்சார கிரகங்களை பார்க்கும்போது குரு 6ல் மறைந்திருப்பதாலும், ராகு-கேதுவின் போக்கு சரியில்லாததாலும் வருத்தத்தில் பிரிந்துள்ளார். கவலைப்படாதீர்கள். 10.10.2014க்குப் பின்னர் வீடு திரும்புவார். திருமணம் இன்னும் முடிக்கவில்லை. அண்டை மாநிலத்தில் உள்ளார். முடிந்தால் பைரவருக்கு நெய் தீபமேற்றுங்கள்.
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.