உங்கள் குடும்ப ஜாதகத்தை பிருகத் ஜாதக நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி குரு நீசமாகி நிற்பதுடன், குரு நின்ற வீட்டாதிபதியான சனி, குருவுக்கு 8ல் மறைந்ததாலும் லக்னாதிபதியான செவ்வாய் ராகுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்ததாலும்தான் குடும்பத்தில் தொடர்ந்து சோகங்களையும், பிரச்னைகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்து வருகின்றீர்கள். குரு வலுவிழந்து காணப்படுவதால்தான் பிள்ளைகளால் பிரச்னைகளையும், மரியாதைக்குறைவான நிகழ்வுகளையும் ஏற்பட்டிருக்கின்றன.
இரண்டாவது மகனுக்கு 5.12.2013 முதல் சந்திரதசை தொடங்கியுள்ளது. ஆனால், தற்சமயம் கண்டகச் சனியும், அடுத்து அஷ்டமத்துச் சனியும் தொடங்குவதால் 18.8.2017 வரை அவர் குடும்பத்தோடு ஒத்துப் போகாமலும், பொறுப்பில்லாமலும்தான் இருப்பார். 19.8.2017 முதல் அவரால் நிம்மதி உண்டாகும். மூத்த மகனின் ஜாதகத்தில் சப்தமாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் நல்ல பெண் வாழ்க்கைத் துணையாக அமைவாள். ஆனால், களத்திரகாரகனான சுக்கிரன் ராசியிலும், நவாம்சத்திலும் பலவீனமாக இருப்பதாலும் அயனாம்ச முறைப்படி ஆராயும்போதும் 10.11.2014 முதல் திருமணம் கூடிவரும் வாய்ப்புள்ளது. பரிகாரமாக திருத்துறைப் பூண்டிக்கு அருகிலுள்ள கச்சனூர் சென்று வருவது நல்லது.
உங்கள் மனைவியின் ஜாதகத்தில் எலும்பு, மூட்டுக்குரிய கிரகம் செவ்வாய் ரோகாதிபதியாக வருவதாலும் அந்த ரோகாதிபதியை சனி, சூரியன் பார்வையிடுவதாலும், உடலாதிபதி சந்திரன் கிரக யுத்த அவஸ்தையில் சிக்கி வலுவிழந்து காணப்படுவதாலும் லக்னாதிபதி புதன் நீசம் அடைந்திருப்பதாலும், கை, கால், இடுப்பு வலியும், சர்க்கரை நோயும் உள்ளது. நோயிலிருந்து விடுபட உங்கள் மனைவி வைத்தீஸ்வரன் கோயில் சென்று முத்துக் குமார சுவாமிக்கு நெய் தீபமேற்றி வணங்கி வருவது நல்லது. உங்கள் மகளுடைய தசா-புக்தியின்படி, 15.2.2015 முதல் நல்ல காலம் பிறக்கிறது. அது முதல் பொறுப்பாக செயல்படத் தொடங்குவார். பஞ்சபூத அடிப்படையில் உங்களுக்கு குலதெய்வம் முழுமையாக அமையாததால் வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சிக்கல் சிங்கார வேலரை தரிசியுங்கள். உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும்.
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.