இருவர் ஜாதகங்களையும் அகத்தியர் ஐநூறு எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம் தங்கை ஜாதகத்தில் மாமியார் ஸ்தானத்திற்குரிய கிரகம் செவ்வாய் 8ல் அமர்ந்து நவாம்சத்தில் நீசம் பெற்றதால்தான், அவருடைய மாமியார் இவ்வாறு நடந்து கொள்கிறார். தங்கையின் ஜாதக தசா புக்திகளின்படி, 20.1.2015 முதல் மாமியாரின் போக்கில் மாற்றம் வரும். மாமியாருடன் இணக்கமாகும் சூழ்நிலையும் உருவாகும். தங்கை கணவரின் ஜாதகப்படி 4ம் வீட்டிற்குரிய தாய் ஸ்தானத்திற்குரிய கிரகம் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும், மாதுர்க்காரகனான சந்திரன் லக்ன கேந்திரம் பெற்று வலுவடைந்திருப்பதாலும்தான் அவர் தனது தாய்க்கு அதிக முக்கியத்துவம் தந்து, தாய்ப்பாசம் மிகுந்தவராக உள்ளார். கணவன்-மனைவி உறவுக்குள் தலையீடு இல்லாமல் அன்யோன்யம் அதிகரிக்க மாமியார் தொல்லை குறைய, கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடி ஊரில் அருள்பாலிக்கும் ப்ரத்யங்கிரா தேவியை அஷ்டமி அல்லது நவமி திதி நாளில் வணங்குங்கள். மகிழ்ச்சி கூடும்.
ஜாதகம் அனுப்புங்க, வாழ்க்கையை தெரிஞ்சுக்கோங்க!
உங்கள் ஜாதகங்களை, உங்கள் கேள்விகளோடு கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். ஜாதகம் இல்லாதவர்கள் பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம், பிறந்த இடம் ஆகிய குறிப்புகளை அனுப்புங்கள். வண்ணமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்!
என்ன சொல்லுது எதிர்காலம்? தினகரன் ஆன்மிகம் பலன், தபால் பை எண்: 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004. ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.