உழைப்பைத் தவிர வேறெந்த வழியுமில்லை. என்ன செய்வது, என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டே இருந்தால் காலம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். ஏதேனும் ஒரு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். எதில் உங்கள் மனம் முழுமையாக ஈடுபடுகிறதோ, எந்த வேலையைச் செய்யும்போதும், செய்து முடித்த பின்பும் சந்தோஷமும் நிம்மதியும் அடைகிறீர்களோ அதுவே உங்களுக்கான வேலையாக இருக்கும். செய்வன திருந்தச் செய் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். சிறிய வேலை, பெரிய வேலை என்றில்லாமல் எல்லா வேலையிலும் நேர்த்தியும் அழகும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மனக் குழப்பம் தானே தீராது. மனம் வேறெதேனும் வேலையில் ஈடுபடும்போது குழப்பமும் சோம்பலும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்துவிடும். செய்வதை அன்றே அப்பொழுதே செய்யுங்கள். திருக்குறளிலுள்ள வினைத்திட்பம், மடியின்மை என்கிற அதிகாரத்தை எப்போதும் படியுங்கள். தற்சமயம் குருவின் 9ம் பார்வை உங்கள் நட்சத்திரத்தில் படுவதால் டிட்வாலா கணபதியையும் (ஞாயிறு அன்று), பன்வேலி ஆஸ்ரமத்திலுள்ள ஷீரடி பாபாவையும் வழிபட்டு வாருங்கள். பல பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.