உங்கள் கணவரின் ஜாதகத்தில் சனி கொஞ்சம் பலமற்றுக் காணப்படுகிறார். நல்ல மருத்துவரை பாருங்கள். தினமும் சிவாலயத்திலுள்ள சனி பகவானை தரிசிக்கச் சொல்லுங்கள். முடிந்தால் காலையிலேயே கோயிலுக்குச் சென்றுவந்து, பிறகு ஆட்டோவை எடுக்கச் சொல்லுங்கள். சனி பகவான் சந்நதியில் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள சொல்லுங்கள். அனைத்து லக்னங்களிலும் முதலிடம் பெறுவது ரிஷபமே ஆகும். உங்கள் மூத்த மகன் கம்ப்யூட்டர் துறையில் நன்கு முன்னேறி நல்ல வேலையில் அமர்வான். பெருஞ் செல்வத்தோடு உங்களையும் சௌகரியமாக பார்த்துக் கொள்வான். இளைய மகன் சுரேஷ் விளையாட்டு வீரனாகவோ, சினிமா, டிவி சீரியல் நடிகனாகவோ வருவான். படிப்புக்கும் பதவிக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கும். மூன்று பேர் உயர்வுக்காக நீங்கள் கீழேயுள்ள இந்தப் பாடலை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் பூஜையறையில் அமர்ந்து பாடுங்கள்.
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.