காசி, அலகாபாத்தில் திரிவேணி சங்கமம், ஜபல்பூர் நர்மதை, பண்டரிபுரம் சந்திரபாகா நதி, கிருஷ்ணா நதி, துங்கபத்ரா போன்ற ஏதாவது ஒரு நதியில் ஸ்நானம் செய்து வஸ்திரம், அரிசி, தங்கம் தானமாகக் கொடுங்கள். ராமேஸ்வரத்திற்கு அருகேயுள்ள ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவகிரகத்தை அடைந்து, அங்குள்ள மணலை எடுத்து கீழேயுள்ள மந்திரத்தை ஒன்பது முறை சொல்லிச் சொல்லி அங்கேயே விடுங்கள்.
வாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.
வாசகர்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் வேத மார்க போதக, கதா ஸரஸபாஷி, சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.