இரக்க குணமும் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற துடிப்பும் மிக்கவர்கள் நீங்கள். உங்களின் பெயர் மற்றும் ஜாதக அமைப்பின்படி ராகு, சந்திரன் இணைப்பால் சிலசமயம் குழப்பங்கள் ஏற்படக் கூடும். இது வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை தவறாக எடுக்கத் தூண்டும். ஆகவே, தெளிவாக இருங்கள். நல்ல வேலை கிடைத்து வாழ்வீர்கள். திங்கட்கிழமையன்று விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ. தொலைவிலுள்ள இடையாறு மருந்தீஸ்வரரை தரிசித்து வாருங்கள். திங்கட்கிழமையன்று விரதமிருங்கள். கீழேயுள்ள காரைக்கால் அம்மையார் பாடலை 11 முறை பாடுங்கள். அரசாங்க வேலை கிடைக்கும்.
வாசகர்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் வேத மார்க போதக, கதா ஸரஸபாஷி, சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
வாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.