கடுஞ்சொற்களைப் பேசி தொழிலில் மென்மேலும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டீர்கள். கேது மற்றும் சந்திரன் இணைப்பு வாழ்க்கையை நிலையற்றதாக கொண்டு செல்கிறது. தினமும் சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் கொஞ்ச நேரம் சூரிய ஒளி உங்கள்மீது படும்படி நில்லுங்கள். கோதுமை அப்பம் செய்து சிவாலயத்திலுள்ள நவகிரக சூரிய பகவானுக்குப் படையுங்கள். அரியலூருக்கு அருகேயுள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமிக்கு அந்தணர்களைக் கொண்டு 11 முறை ருத்ர ஜபத்தை நடத்துங்கள். அந்த தீர்த்தத்தை எடுத்து வந்து ஸ்நானம் செய்யுங்கள். வீட்டை சுத்தம் செய்யும் ஆசிட் பொருட்களை வியாபாரம் செய்யுங்கள். சைவ சாப்பாடு ஹோட்டல் வேண்டாம். சிவாலயத்தில் சனிக்கிழமையன்று அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ என்று 336 தடவை, சொல்லுங்கள். நீடித்த ஆயுளுடன் பொருட் செல்வமும் வந்து சேரும்.
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.