வாயில்லா ஜீவன்களிடம் நீங்கள் காட்டும் அன்பு போற்றத்தக்கது. ஆனாலும், அதற்காக அழுவதையெல்லாம் நீங்கள் குறைத்துக் கொள்ளுங்கள். உயிர்கள் அதனதன் இயல்பில் இருக்க வேண்டும். தேவையில்லாமல் நீங்கள் எப்போதும் இதையே நினைத்து அழுது கொண்டிருந்தால் நல்ல மனநல ஆலோசகரை அணுகுவதுதான் ஒரே வழி. ஆயிரக் கணக்கான தெய்வங்கள் பசுவின் உடலில் உறைந்துள்ளதாலேயே வேதங்களும் பசுக்களை போற்றுகின்றன.
வேதத்தில் ஒரு மந்திரம் உள்ளது. அதாவது, ‘‘அபசிதோஹம் மனுஷ்யே ஷு பூயாஸம்’’ அதாவது, மனிதர்களிடம் உன்னை பூஜிக்கும்படியான எண்ணம் பெருகட்டும் என்று பொருள். ஜோதிடர்கள் கூட சோளம், அறுகம்புல், பச்சரிசி, தவிடு, எள்ளு, புண்ணாக்கு போன்றவற்றை பசுவிற்குக் கொடுத்து பூஜித்து வந்தால் பரிகாரங்களே தேவையில்லை என்கிறார்கள். எனவே, வாயில்லா ஜீவன்களைப் போற்றுங்கள். தொந்தரவு செய்ய வேண்டாம். ஆனால், அவை ஏதோ எப்போதும் கஷ்டப்படுவது போல உங்களுக்குள் நினைத்து நினைத்து அழுது கொண்டிருந்தால் தவறு உங்களுடையது தான். ‘கவாம் அஸ்ஜேஹு திஷ்டந்தி புவனானி சதுர்தச தஸ்மாத் அஸ்யாக்ஷ ப்ரதானேன சாந்திம் ப்ரயச்சமே’ - என சொல்லி வாழ்நாளில் ஒரு தடவையாவது கன்றுடன் கூடிய பசுவை தானம் செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பசுவை அலங்கரித்து உணவு கொடுத்து கீழேயுள்ள மந்திரத்தை 9 முறை சொல்லுங்கள்.
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.