உங்கள் மகன் மூல நட்சத்திரத்தில் சந்திரன், சுக்கிரன் இணைப் பிலும், புதனுடைய ஆதிக்கத்திலும் பிறந்திருக்கிறார். அவரை வித்தை விரும்பி என்று கூறலாம். கலைத்துறையில் ஆர்வம் அதிகமாகும். நன்றாகப் பேசியும், வாதாடியும் ஒரு கூட்டத்தையே நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றிருப்பான். அரசுப் பணி கிட்டவும் வாய்ப்பு உண்டு. முப்பது வயதிற்குப் பின்தான் படிப்பும் பதவியும் உயரும். வெள்ளைப் பசுவிற்கு ஒன்பது நாட்கள் தொடர்ந்து புல்லுடன் பச்சரிசி சாதத்தை கொடுத்து பூஜியுங்கள். சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துங்கள். சென்னை, கொட்டிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலனியில் அமைந்துள்ள ஆஞ்சநேயரை சிறப்பு வழிபாடு செய்து எள்ளு சாதம் படைத்து பக்தர்களுக்கு கொடுங்கள்.
சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தரு
வீர்கள். பழைய பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.