சாதாரணமாக உங்கள் கையெழுத்தை லட்சுமி என்றே போடுங்கள். மீன் பொம்மைகளை குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று 32 எண்ணிக்கையில் கொடுங்கள். வடதிசையில் கிடைக்கும் அரசு வேலை சிறப்பாக அமையும். பச்சை நிற ஆடையை உடுத்துங்கள். விஷ்ணு ஆலயத்தில் நவகிரகத்திலுள்ள புதன் பகவானுக்கு ஆங்கிலத் தேதி 5 அன்று துளசியால் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்யுங்கள். நாமக்கல் ஆஞ்சநேயர் சந்நதியில் சனி அன்று விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படியுங்கள். ‘ஓம் பாஸ்கராய நமோ நமஹ’ என்கிற மந்திரத்தை சூரியன் உதிக்கும்போது 19 முறை சொல்லி நமஸ்கரியுங்கள்.
வாசகர்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் வேத மார்க போதக, கதா ஸரஸபாஷி, சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ என்.வைத்யநாத தீட்சிதர்
வாசகர்கள் தங்கள் பிரச்னைகளை தினகரன் ஆன்மிக மலர், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவர்கள் கண்டிப்பாக தம் பெயர் / பிறந்த தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.