தங்கள் ஜாதகப்படி சில கிரக சேர்க்கை காரணமாக படிப்பில் அரியர்ஸ் வைத்துள்ளீர்கள். படிப்பில் கவனம் செலுத்தி படிக்கவும். சில கிரக மாற்றங்கள் கூடிய விரைவில் ஏற்பட இருப்பதால் நிச்சயமாக பட்டம் பெறும் வாய்ப்பு உள்ளது.
முதலில் படிப்பில் கவனம் செலுத்தவும். மற்றவை அந்தந்த கால கட்டத்தில் கைகூடி வரும்.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.